Saturday 29 January 2022

தொல்காப்பியர் - திருக்குறள் : பள்ளிகளில் இறைவணக்கம்


 பள்ளிகளில் இறைவணக்கம் பாடுவதை பற்றி இப்பொழுது பல சர்ச்சைகள் நடந்துகொண்டுள்ளது. தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம் மற்றும் தமிழ் சிதைந்த அடிப்படை நூல் திருக்குறள் என்ன சொல்கிறது என்று பாப்போம்.

இறை வணக்கம் என்பது இன்று நேற்று அல்ல அது 2000 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது தொல்காப்பிய காலம் முதலே நம் முன்னோர்கள் பின்பற்றி வரும் மரபாகும். உதாரணமாக,
"கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்
' கடவுள் வாழ்த்தொடு' கண்ணிய வருமே"
- ----தொல்காப்பியம்.
தொல்காப்பியத்தில் தனியாக கடவுள் வாழ்த்துப்பகுதி இல்லை எனினும் கடவுள் வாழ்த்துக்கு சமமான பகுதிகளை தெளிவாக எடுத்துக் கூறுகிறார். நாம் வழிபடும் தெய்வம் நம்மை காக்கும் என்ற முழுமுதற் கடவுள் கோட்பாடும் தொல்காப்பியர் காலத்தில்
இருந்தது என்பதை மறுக்க முடியாது...!
"வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து
பொலிமின்"
- --- தொல்காப்பியம்.
பொருள் : நீ வழிபடுகின்ற தெய்வம் உன்னையும் உன் குடும்பத்தையும், சுற்றத்தையும் பாதுகாக்கட்டும். குற்றமற்ற செல்வத்துடன் மக்களையும் குடிவழியினரையும், நீ பெற்று, வழிவழி சிறந்து நீடுவாழ்வாயாக என்று புறநிலை வாழ்த்துப் பகுதியில் குறிப்பிடுகிறார்.
இதையே திருவள்ளுவர் கூறுகையில்,
"பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்"
- திருக்குறள்.
பொருள் : இறைவனுடைய திருவடிகளைப் பற்றுபவர்களால் பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க முடியும். இறைவனுடைய திருவடிகளை பற்றாதவர்களால் பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க இயலாது.
இவ்வாறாக இறைவனை வழிபடும் வழக்கமும், இறைவனிடம் தனக்கு வேண்டியதை கேட்டு பெறுவதும் தமிழர்களிடம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருவதை தொல்காப்பியம் முதலான திருக்குறள் போன்ற பல நூல்கள் பறைசாற்றுகின்றன. நம் முன்னோர்கள் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் இறைவனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டே அச்செயலை செய்வர் என்பதற்கு திருக்குறளின் பத்து கடவுள் வாழ்த்து குறள்களே சான்றாகும்...!

No comments:

Post a Comment