Wednesday 23 January 2019

தொண்டை மண்டல சதகம் - படிக்காசு புலவர் அருளியது Thondai Mandala Sathagam

தொண்டை மண்டல சதகம் - படிக்காசு புலவர் அருளியது
.
"எண்ணான் கறந்தொண்டை மண்டலத்
தார்க்கன்றி யில்லையெனத்
தண்ணார் வயலுழன் றன்சொல
வேந்தன் றலைதடிந்த
தெண்ணாமன் மன்னனு மப்படி
யேசொல விப்படியின்
மண்ணாளும் வேந்தன் வரிசைபெற்
றான் தொண்டை மண்டலமே . ||
.
முப்பத்திரண்டு அறங்களையும் செய்யும் ஆற்றல் தொண்டை மண்டலத்து வேளாள முதலியார்களை தவிர மற்றவர்களுக்கு உரியது அன்று, என்று வேளாளர் குலத்தில் தோன்றிய கிடங்கன் பெருமாள் முதலியார் கூற அரசன் அவரை கொலை புரிய கட்டளை இட்டான். பின்னர்,தன்னுடைய குமாரனால் வேளாளர்களுடைய சொற்றிறதையும் செயல் திறத்தையும் அறிந்து கிடங்கன் முதலியார் கூறியது போல,வேளாளரே அறம் வளப்பவர் என்று கூறியதோடு அவ்வேந்தனே வேளாளர்களுக்கு சிறப்பும் செய்தான் என்ற வரலாற்று சிறப்பு பெற்றதும் தொண்டை மண்டலமே ஆகும்.

No comments:

Post a Comment