Wednesday 23 January 2019

Gems of Tamil Literature : Pattinathaar


Gems of Tamil Literature : Pattinathaar
.
" கல்லாப் பிழையும்
கருதாப் பிழையும்
கசிந்துருகி நில்லாப் பிழையும்
நினையாப் பிழையும்
அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும்
துதியாப் பிழையும்
தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும்
பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே...!"
விளக்கம் :
கல்வி கற்காத பிழையையும், அதைக் கருதி உணராத பிழையையும், உன்னை எண்ணி மனம் கசிந்து உருகி நில்லாத பிழையையும், உன்னை நினைக்காத பிழையையும், சிவாயநம என்ற ஐந்தெழுத்தைச் சொல்லாத பிழையையும், உன்னைத் துதிக்காத பிழையையும், உன்னைத் தொழாத பிழையையும், மற்ற எல்லாப் பிழைகளையும் பொறுத்தருள்வாய் காஞ்சிபுரம் அமரும் ஏகாம்பர நாதனே ...!

No comments:

Post a Comment