Thursday 24 January 2019

Thirumangai Azhwar Pasuram - Beauty of Tamil



எட்டுமெட்டுமெட்டுமாய் ஓரெழுமேழுமேழுமாய்

எட்டுமூன்று மொன்றுமாகி நின்றவாதி தேவனை
எட்டினாய பேதமோடு இறைஞ்சிநின்றவன் பெயர்
எட்டெழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானமாளவே..||
.
எட்டுமெட்டுமெட்டுமாய் [8 + 8 + 8= 24]
ஓரெழுமேழுமேழுமாய் [7, 7, 7]
எட்டுமூன்று மொன்றுமாகி [8 + 3 + 1 =12]
.
.
இருபத்து நான்கு தத்துவங்களுக்கு நிர்வாஹகனாயும், ஸப்த த்வீபம், ஸப்த குலபர்வதம் , ஸப்தஸாகரம் ஆகியவற்றுக்கு நிர்வாஹகனாயும், த்வாதச ஆதித்யர்களுக்கு அந்தராத்மாவாகவும் இருக்கும் பரம புருஷனை ஸாஷ்டாங்கமாக தண்டம் சமர்ப்பித்து, அந்த எம்பெருமானுக்கு வாசகமான திருவெட்டெழுத்தை (அஷ்டாக்ஷர மஹாமந்திரத்தை) சொல்லுகிறவர்கள் பரமபதத்தையே ஆளப்பெறுவார்கள் என்கிறார்.

No comments:

Post a Comment