Sunday 5 March 2017

Ottakoothar Song on Bhagwan Shiva :


Ottakoothar Song on Bhagwan Shiva :
.
எந்தாய் போற்றி ஏறுஏறும் 
இறைவா போற்றி ஏழ்உலகும் 
தந்தாய் போற்றி சகம்உய்ய 
வந்தாய் போற்றி வஞ்சகர்முன் 
வாராய் போற்றி மலரோனும் 
செந்தா மறைக்கண் திருமாலும் 
ஆனாய் போற்றி சிவபோற்றி ..||
.
--- கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்
.
விளக்கம் :

எம் தந்தையே வணக்கம். எருது ஏறுகின்ற இறைவனே வணக்கம்.ஏழு உலகத்தையும் தோற்றுவித்தவனே வணக்கம்.அழகிய கொன்றை மாலை அணிந்தவனே வணக்கம். உலகம் உய்திபெற வடிவுதாங்கி வந்தவனே வணக்கம்.வங்ச நெஞ்சத்தவர்க்கு முன்பு வந்து தோன்றாதவனே வணக்கம்.வேண்டாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் சிவந்த தாமரை மலர் போன்ற கண்ணையுடைய திருமாலும் ஆக விளங்குபவனே வணக்கம். சிவனே வணக்கம். 

No comments:

Post a Comment