Tuesday 29 November 2016

Avvaiyaar - Moothurai மூதுரை

*அற்ற* குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.

மூதுரை, ஔவையார்
.

நீர் வற்றியதும், குளத்திலிருந்து வாழும் பறவைகளைப் போல துன்பம் வந்த போது நீங்கி விடுபவர்கள் சுற்றத்தார் ஆக மாட்டார்கள். அந்தக் குளத்திலுள்ள கொட்டிப்பூண்டையும், அல்லிக்கொடியையும், குவளைக் கொடியையும் போன்றவர்களாக சேர்ந்து, நீர் ஏற்றத் தாழ்வுகள் போல் உயர்ந்தும் தாழ்ந்தும் துன்பத்தையும் இன்பத்தையும் ஏற்றுக் கொள்பவர்களே நல்ல சுற்றத்தவர் ஆவார்கள்.

No comments:

Post a Comment