ஆதியாய் நின்ற அறிவு முதல்எழுத்து
ஓதிய நூலின் பயன் .
.
கருத்துரை :
தமிழில் முதல் எழுத்து " அ " வேதத்தின் முதன்மை எழுத்து "ஓம்" எனும் பிரணவம் ஆகும். இந்த முதல் எழுத்தின் மூலத்தை அரியச் செய்த நூலின் பயனே அறிவின் நிறைவாகும். அறிவை தருவது நூல். அந்நூலை அறிய வைப்பதும் அறிவே ஆகும்.
.
அரும்பத உரை :
ஆதி - முதல், ஓதிய - அறியச் செய்த
.
தெரிவுரை :
" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " - என்பது திருக்குறள். " அகரமுமாகி அதிபனுமாகி " என்பர் அருணகிரிநாதர்.
எழுத்துகளில் முதல் எழுத்து அகரம் அதுபோல் இறைவன் உலகு, உயிர் அனைத்திற்கும் முதன்மையானவன்.
"அ " வின் சிறப்பு, வெளிமுயற்சி களுள் வாயைத் திறந்தாள் என்ற ஒரு அசைவிலையே பிறப்பது அகரம். எந்த எழுத்தொலியும் வாயைத் திறவாமல் பிறப்பதில்லை. வாயைத் திறந்தவுடன் உண்டாகும் "அ" என்ற ஒலியில்லாமல் எழுத்துகள் ஒன்றும் தோன்ற மாட்டா. அதுபோல இறைவனின்றி உலகம் மற்றும் உயிர் எதுவும் தோன்றமாட்டா. " அகர உயிர்போல் அறிவாகி எங்கும் நிகரில் இறை நிற்கும் நிறைந்து" என " திருவருட்பயன்" என்ற நூல் பகரும்.

No comments:
Post a Comment