Know Your Tamil Poets : Kavichakravarthi Ottakoothar
.
வீக்கா உக்கா வித்தா விப்போய்
விட்டால் நாட்டார் சுட்டுட் புக்கார்
அக்கா யத்தா சைப்பா டுற்றே
இல்தே டிப்போய் வைப்பீர் நிற்பீர்
அக்கா டப்போய் தொக்க டச்சூழ்
அப்பா டத்தீ வெப்பா டப்பூண்
நேக்கா டக்கா னத்தா டப்பேர்
நெய்த்தா னத்தா னைச்சே வித்தே.
.
Meaning :
.
விக்கல் உண்டாகித் தளர்ந்து உயிரானது உடலை விட்டு நீங்கி விட்டால் சுற்றத்தார் பிணத்தை சுடுகாட்டில் இட்டுச் சுட்டபின் ஊருக்குச் சென்று விடுவார்.இத்தகைய தன்மையுடைய உடலின்மீது ஆசை கொண்டு செல்வத்தை தேடி வீட்டுக்குள் எடுத்துச் சென்று வைப்பவர்களே!
எலும்பு மாலையானது அசையவும்,பேய்கள் கூடி கூத்தாடவும், சடையில் கூடியிருக்கும் கங்கை அசையவும், கையில் உள்ள தீயானது ஆடவும், காதணிகள் அசையவும், சுடுகாட்டில் நடனம் செய்யும் பெருமை பொருந்திய "நெய்த்தானம்" என்னும் தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபாட்டு நிலையான பேற்றை அடைவீராக ! என்பதாகும்.
No comments:
Post a Comment