Wednesday, 25 October 2017

Gems of Tamil Literature : Madhura Kavi Raayar.

Gems of Tamil Literature : Madhura Kavi Raayar.
.
ஒரு மங்கையை கண்டு காதலித்து பாடியது :
"மூவொன்பது என்பதில்ஓர் நானில்லை, மொய்வனத்தில் 
தாவும் தனிமிருகந் தானில்லை:- நேரே
வளையா னடையில்லை; வார்இருக விம்மும்
முலையாளை யான் முயங்குதற்கு."
.
விளக்கம் :
மூவொன்பது என்பதில்ஓர் நானில்லை - இருபத்தேழு நட்சத்திரத்திலொன்றாகிய "உத்திரம்" ( அதாவது அவள் மறுமொழி) இல்லை.
மொய்வனத்தில் தாவும் தனிமிருகந் தானில்லை - அடர்ந்த காட்டில் தாவி செல்லும் இணையற்ற விலங்காகிய அதாவது போன் இல்லை.
நேரே வளையா னடையில்லை - நேராக வளையாது செல்லும் அன்னம் (அதாவது சோறு) இல்லை.
வார்இருக விம்மும் முலையாளை யான் முயங்குதற்கு - அழகாக உடைய பெண்ணே
.
பொருள் நயம்:
.
நான் காதலித்த மங்கை என்னை விரும்பதற்கூறிய பொன்னும், உண்ணுவதற்கூறிய சோறும் என்னிடம் இல்லாமையால், மறுமொழி ஒன்றும் கூறாது மெளனமாக இருக்கிறாள் என்பது புலவருடைய கருத்து.
அதை சொல்நயம் தோன்றப் போன் எனும் பொருள்படும். காட்டில் தாவி ஓடும் " வேங்கையையும்", உண்ணும் சோறு என்று பொருள்படும், நடை அழகில் சிறந்த " அன்னத்தையும்" தான் பெற்றில்லாத காரணத்தால் அவளிடம் இருந்து பதில் வரவில்லை என்பதை இருபத்தேழு நட்சத்திரங்களில் ஒன்றாகிய " உத்திரம் " கிடைக்கவில்லை என்று ஒரு பொருளைக் குறிக்கும் வேறுசொற்களைக் விளக்கியுள்ளார் மதுர கவி ராயர்.

No comments:

Post a Comment