Thursday 7 September 2017

Tamil Literature : Anthaga Kavi Veera Raghava Mudaliar, அந்தகக் கவி வீரராகவ முதலியார்

Know Your Tamil Scripture :
.

கட்டுச் சோற்றைப் பறிகொடுத்தபோது பாடியது :
.
"சீராடை அற்ற பைரவன் வாகனம், சேரவந்து.
பாராரும் நான்முகன் வாகனம் தன்னைமுன்
பற்றிகௌவ்வி,
நாராயணன்உயர் வாகனம் ஆயிற்று,
நம்மைமுகம் பாரான்:
மை வாகனன் வந்தே வயிற்றில் பற்றினனே !"
.

-- அந்தகக் கவி வீரராகவ முதலியார்
.
சீராடை அற்ற வைரவன் வாகனம் - ஒழுங்கான ஆடையில்லாமல் ( கௌபீனம் தரிக்கும் ) வைரவரின் ஊர்தியாகிய நாய்,சேரவந்து - கிட்டவந்து, பாராரும் நான்முகன் வாகனம் தன்னை - நிலத்திலிருந்த பிரமன் ஊர்தியாகிய அன்னத்தை, முன் பற்றி கௌவி - நாம் எடுக்குமுன் எடுத்து வாயில் வைத்துக்கொண்டு, நாராயணன் உயர் வாகனம் ஆயிற்று - விஷ்ணுவின் பறக்கும் ஊர்தியாகிய கருடன் போல ஓடி விட்டது , நம்மை முகம் பாரான் - நாம்மிடத்திலே இரக்கம் வையாதவனாகிய, மைவாகனன் - ஆட்டை ஊர்தியாகவுடைய தீக்கடவுள், வயிற்றினுள் வந்து பற்றினனே - நமது வயிற்றிற் பிடிப்பாய்த் தங்களாயினன்.

No comments:

Post a Comment