Wednesday, 23 January 2019

Kumaresa Sathagam -குமரேச சதகம் - குகுபாததாசன் இயற்றியது

குமரேச சதகம்
.

வாழ்ந்தாலும் இறந்தவர்கள் யார்?
.
"மாறத வறுமையோர் தீராத பிணியாளர்
வருவேட் டகத்திலுண்போர்
மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர்
மன்னுமொரு ராசசபையில்
தூறாக நிந்தைசெய் துய்குவோர் சிவிகைகள்
சுமந்தே பிழைக்கின்றபேர்
தொலையா விசாரத் தழுந்துவோர் வார்த்தையில்
சோர்வுபட லுற்றபெரியோர்
வீ றாக மனையாள் தனக்கஞ்சி வந்திடு
விருந்தினை ஒழித்துவிடுவோர்
வீம்புடன் செல்லாத விவகாரம் அதுகொண்டு
மிக்கசபை ஏறும் அசடர்
மாறாக இவரெலாம் உயிருடன் செத்தசவம்
ஆகியொளி மாய்வர் கண்டாய்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே || "
(குமரேச சதகம் - குகுபாததாசன் இயற்றியது )
.
விளக்கம் :
மயில் ஏறி விளையாடும் குகனே!
வறுமை நிரம்பியவர்: நோய் தீராத நோயாளிகள்: மாமனார் வீட்டிலே தங்கியிருந்து சோற்றை உண்பவர்கள்: திருமணம் செய்துகொண்ட மனைவியை தீய தொழிலில் ஈடுபடுத்தி அதனால் வரும் பொருளைக் கொண்டு வாழ்க்கை நடத்துபவர்கள்: தாங்கள் இருக்கும் அரசபையில் பிறர்மேல் பழிகூறி அதனால் வாழ்பவர்கள்: பல்லக்கை சுமர்ந்து வயிறை வளப்பவர்கள்: அதிகமான கவலையில் முழுங்கியிருப்பவர்கள்: சொன்ன சொல் தவறி நடப்பவர்கள்: மனைவிக்கு பயந்து விருந்தினர்களைத் துரத்துவோர்: நடக்காத ஒன்றை வழக்கமாக கொண்டு சென்று விடாப்பிடியாக வாதாடுபவர்கள் எனக் கூறப்பட்ட இவர்கள் உலகில் உயிருடன் வாழ்ந்தாலும் இறந்தவர்களேயாவார்.

No comments:

Post a Comment