Monday, 20 February 2017

தேவார தமிழின் பெருமையை காணுங்கள்.....நல்ல தமிழ் உச்சரிப்பிற்கு இதுவே பயிற்சி. ...
சீர்காழி எனப்படும் திருப்பிரமபுரத்தில் திருஞானசம்பந்த பெருமான் பாடிய தேவாரம் இது.
இந்த பதிகம் சாதாரி பண்ணில் அமைந்த வழிமொழித் திருவிராகம்.
இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில்
22 'ழ'கரங்கள் வரும்படியாக பாடல் அமைந்திருக்கும் இப்பதிகத்தை ஓதும்போது திருஞானசம்பந்த பெருமானின் திருவடிகளை பற்றிக்கொண்டு கண்ணீரால் நிறைக்க வேண்டுமென தோன்றும்
"தமிழ்ச் சுற்றும் முற்றுமாகிய தமிழ்ஞானசம்பந்த பெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!"
.
"ஒழுகலரி தழிகலியில் உழியுலகு பழிபெருகு வழியைநினையா
முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகள் மொழிதகையவே."

No comments:

Post a Comment