Thursday 19 September 2019

Gems of Tamil Literature - Kalithogai, கலித்தொகை

Gems of Tamil Literature :
.
கலித்தொகையில் கபிலரின் பாட்டொன்று சுவையானது. யானையொன்று மரத்தினில் தனது தநாதத்தைச் சொருகி எடுக்க முடியாமல் போனது. இதற்கு உவமை கூறிய கபிலர்
"இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
உமைஅமர்ந்து உயர்மலை இருந்தன னாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான
தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுத்து அம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல,"
என்று கூறுகிறார். இமையத்தை வில்லாக உடைய பெருமான் உமையோடும் கைலையில் வீற்றிருக்கப் பத்துதலை கொண்ட அரக்கன் அதனை அசைக்க முடியாமல் உழல்வதைக் கூறுகிறார்.
இவ்விதம் உவமானத்திற்குக் கூட இராமாயண மஹாபாரதச் செய்திகள் சங்ககாலத்திலும் மருவிய காலத்திலும் வழக்கிலிருந்தன.

No comments:

Post a Comment