Friday 9 June 2017

Siva Siva Venba

Gems of Tamil Scripture : Siva Siva Venba
.
"விற்பிரப்பான் மன்னர்செயன் மேவவுல கேங்குநிறை
சிற்பரனே தெய்வஞ சிவசிவா - பொற்பின் 
அகர முதல வெழுத்தெல்லா மாதி 
பகவன் முதற்றே யுலகு."
.
- --சென்னமள்ளய்யர் (1767 AD ) - சிவா சிவா வெண்பா
.
குறட்கு உரை :
.
அகரமாகிய முதலையுடையான், எழுத்துக்களெல்லாம்; அது போல ஆதிபகவானாகிய முதலை உடைத்து உலகமேன்றவாறு.
.
அகரவுயிர்போல ஆதிபகவானாகிய பரமசிவனை உலகத்தில் வியாபித்து நின்றதற்குப் பிரமாணம் : வில்லாலும் பிரம்பாலும் அருச்சணனும் பாண்டியனும் அடித்த அடி எங்கும் உற்றமையால் விளங்கும். அருச்சனன் தவம் பன்னுகையிர் சிவபிரான் வேடவடிவந்கொண்டு எழுந்தருளினபோது வில்லாலடித்தது பாரதத்தில் தவனிலைச் சருக்கத்தில் சொல்லப்பட்டது.

No comments:

Post a Comment