Monday 2 March 2020

Gems of Tamil Literature : நல்லாற்றூர் ஸ்ரீ சிவப்பிரகாசர்
.
குடக்கோடு வானெமிறு கொண்டார்க்குக் கேழல்
முடக்கொடு முன்னமணி வாற்கு - வடக்கொடு
தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல்
ஊருடையானென்னும் உலகு..||

பாடலின் பொருள் :
கிழக்கில் தோன்றி மேற்கு நோக்கி ஓடும் சூரியனது பல்லை பறித்தவனும், முன்னொரு காலத்தில் பன்றியின் வளைந்த கொம்பை ஒடித்து மார்பில் அணிந்தவனும், வடக்கு நோக்கி வீசுகின்ற தென்றலைத் தனது தேராகக் கொண்டு விளங்கிய மன்மதனை பகைவனாக கொண்டவனும் ஆகிய பரம்பொருள் சிவபெருமான் நிரந்தரமாக தங்கி உறைகின்ற ஊர் சிதம்பரம் என்னும் தில்லையாகும். அவனது வாகனம் எருதாகும் என்பது இப்பாடலின் பொருளாகும்.
பரம்பொருள் சிவபெருமான் நடனமாடும் சிதம்பரம் எனும் தில்லையையும், அவன் உடுத்தும் உடையானது தோலாடையையும், அவன் ஊர்ந்து செல்கின்ற வாகனம் எருது என்பதையும் " தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல் ஊறுதியானென்னும் உலகு" என பாடியுள்ளார்.